2025 ஜூலை 02, புதன்கிழமை

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கான திகதிகள் அறிவிப்பு

Niroshini   / 2016 ஜூன் 05 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கான திகதிகளை வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தiலாவர்களில் ஒருவரான மருத்துவர் சி.சிவமோகன் அறிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 29ஆம் திகதி காலை 9.00 மணிக்கு ஒட்டுசுட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் காலை 11.00 மணிக்கு கரைதுறைபற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் பிற்பகல் 03.00 மணிக்கு வெலிஓயா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, 30ஆம் திகதி காலை 9.00 மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் பிற்பகல் 02.00 மணிக்கு துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் மாலை 04.00 மணிக்கு மாந்தைகிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளன.

அவ்வவ் பிரதேச செயலகங்களில் இக்கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .