Editorial / 2022 ஜனவரி 21 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்
காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த வவுனியா பூம்புகார் கல்மடு பகுதியை சேர்ந்த கருப்பையா ராமாய் (வயது 78) சுகவீனமடைந்த நிலையில், இன்று (21) மரணமடைந்துள்ளார்.
இவரது வளர்ப்பு மகனான ரா.இந்திரபாலன் வயது 38 கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து வெள்ளைவானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
அவ்வாறு காணாமலாக்கப்பட்ட உறவினர்களைத் தேடி வடக்கு, கிழக்கில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் உணவுத்தவிர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.
வவுனியாவில் 1799 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டத்திலும் கருப்பையா ராமாய் என்றத் தாய் கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தி போராடியிருந்தார்.
இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் இன்று (21) மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
2 hours ago
7 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
27 Jan 2026