Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க அகரன்
வவுனியா மத்திய சிறைச்சாலைக்குள் வைத்து, மகனுக்கு ஹொரோய்ன் கொடுக்க முற்பட்ட தந்தையொருவர், சிறைச்சாலை அதிகாரிகளால், நேற்று (08) மாலை கைதுசெய்யப்பட்டார்.
நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் நமசிவாயம் ((71 வயது) என்பவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து, 45 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனைப் பார்வையிடுவதற்காக, குறித்த நபர், சில பொருட்களுடன் சிறைச்சாலை வளாகத்துக்குச் சென்றுள்ளார்.
இதன்போது, தான் கொண்டு சென்ற சவர்க்காரத்தை வெட்டி அதனுள் ஹெரோய்னை மறைத்து வைத்து, மகனுக்குக் கொடுக்க முற்பட்டபோதே, சிறைச்சாலை அதிகாரிகளால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .