Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்,சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவை பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617.331 ஏக்கர் காணிகளை அங்கு நிலைகொண்டிருக்கின்ற கடற்படையினரின் தேவை கருதி சுவீகரிப்பதற்காக புதன்கிழமை (03) மேற்கொள்ளப்படவிருந்து நிலஅளவை பணி, மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
காலை முதல் அங்கு கூடிய மக்கள், வட்டுவாகல் பாலத்தை அண்மிய பகுதியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதனால், காணி அளவீடு செய்ய வந்த அளவீட்டாளர்கள் அளவீட்டை கைவிட்டுத் திரும்பிச் சென்றனர்.
புதன்கிழமை ஆரம்பிக்கப்படும் நில அளவை, 5 ஆம் திகதி வரை தொடர்ந்து காலை முதல் மாலை வரை மேற்கொள்ளப்படும் என்றும், அந்தப் பகுதியிலுள்ள காணி உரிமையாளர்கள் யாராவது இருப்பின் அவர்கள் உரிய ஆவணங்களுடன் நில அளவை செய்யப்படும்போது அங்கு சமூகமளிக்குமாறு அரச நில அளவையாளர் பா.நவஜீவன் எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
அதற்கமைய அங்குகூடிய மக்கள் எதிர்பை வெளிக்காட்டி நிலஅளவையாளர்களை பணி செய்யாமல் தடுத்தனர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவப்பிரகாசம் சிவமோகன், செல்வம் அடைக்கலநாதன், சாந்தினி ஸ்ரீஸ்கந்தராசா, வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.அன்ரனி ஜெயநாதன், துரைராசா ரவிகரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago