Editorial / 2022 மார்ச் 03 , பி.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மணல் மண் அகழ்வு செய்யப்படும் இடங்களுக்கு, திணைக்கள தலைவர்கள், அரச அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உள்ளடக்கிய விசேட குழுவினர், நேற்று (02) நேரடியாக கள விஜயம் மேற்கொண்டனர்.
பொது அமைப்புக்களின் ஒன்றியம், மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரிடம் விடுக்கப்பட்ட வேண்டு கோளுக்கு அமைவாக, இந்தக் கள விஜயம் இடம்பெற்றுள்ளது.
மணல் அகழ்வுடன் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள், பிரதேசச் செயலாளர், அரசாங்க அதிபர், ஏனைய சிவில் அமைப்புக்கள், புவிச்சரிதவியல் திணைக்களம், பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் மற்றும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக மணல் அகழ்வு இடம்பெற்று வரும் இடங்களை பார்வையிட்டு, தொடர்ச்சியாக மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த தீர்மானத்துக்கு அமைவாவே மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மணல் அகழ்வு செய்யப்படும் இடங்களில் நேரடியாக கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
3 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
27 Jan 2026