Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு – துணுக்காய் - புத்துவெட்டுவானில் தொடர்கின்ற மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துமாறு, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இறுதியாக நடைபெற்ற துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக புத்துவெட்டுவான் கிராமத்தின் மருதங்குளத்தின் கீழான ஆற்றுப்படுகைகளில் தொடர்கின்ற மணல் அகழ்வு தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டபோது, கூட்டத்தின் இணைத்தலைவர்களில் ஒருவரான அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் மேற்படி கிராமத்தில் நடைபெறுகின்ற மணல் அகழ்வினை உடனடியாக தடை செய்யுமாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.
இருப்பினும், தற்போதும் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடைபெறுகின்றது. இதன் காரணமாக கிராமத்தின் சூழல் பாதிக்கப்பட்டு விவசாய முயற்சிகள் அழிவின் விளிம்புக்குள் செல்லப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக ஏற்கெனவே வடமாகாண முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், துணுக்காய் பிரதேச செயலாளர் ஆகியோரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும், சம்பந்தப்பட்டோர் புத்துவெட்டுவானில் நடைபெறுகின்ற மணல் அகழ்வைப் வந்து பார்வையிடவில்லை எனவும் பொது மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .