Editorial / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தின் மணியங்குளத்தின் பின்பகுதியில் நடைபெறுகின்ற மணல் அகழ்வை, அக்கராயன் பொலிஸார் கட்டுப்படுத்த வேண்டும் என, அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வயல் நிலங்களில் தொடர்கின்ற மணல் அகழ்வால் எதிர்காலத்தில் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ள முடியாத நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது.
இதனைவிட ஆரோக்கியபுரம் கிராமத்தில் இருந்து மணியங்குளம் ஊடாக ஸ்கந்தபுரத்துக்குச் செல்கின்ற வீதியைக் கூட அகழ்ந்து மணல் அகழ்வு நடைபெறுகின்றது.
இதன் காரணமாக அக்கராயன் வழியாக ஸ்கந்தபுரம் பயணிக்க வேண்டிய நிலையில் வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான்குளம் கிராம மக்கள் உள்ளனர்.
இந்நிலையில் குறித்த மணல் அகழ்வை, அக்கராயன் பொலிஸார் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago