Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Princiya Dixci / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
மணல் விற்பனை மற்றும் அகழ்வதற்கான அனுமதியை தனியார் நிறுவனமொன்றுக்கு அரசாங்கம் வழங்கவுள்ளதைக் கண்டித்து, வட மாகாண டிப்பர் உரிமையாளர்களும் சாரதிகளும் இன்று (5) ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்பாக வாகனங்களுடன் ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், பேரணியாக மாவட்ட செயலகத்தை அடைந்தனர். இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரைக் கையளித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தமது கோரிக்கை தொடர்பாக கவனம் செலுத்தி, தீர்வைப் பெற்றுத்தருமாறும் கோரினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில், 'அனைத்து மாகாணங்களிலும் மணல் மற்றும் கிரவல் அகழ்வதற்கும் அதனை வழங்குவதற்கும், தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு கொடுக்கவுள்ளதாக எமக்கு அறியக் கிடைத்துள்ளது. இதன் காரணமாக டிப்பர் வாகனங்களை வைத்துள்ளவர்கள், பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும்.
மேலும், தனியார் நிறுவனம் குத்தகைக்குப் பெறும் பட்சத்தில், மணல் மற்றும் கிரவல் வியாபரத்தை நம்பித் தொழில் செய்யும் 8,000 பேர் பாதிப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதுடன், டிப்பர் வாகன உரிமையாளர்கள், தங்களின் வாகனங்களுக்கான குத்தகைப் பணத்தைக் கூட செலுத்த முடியாத நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள்' என்றனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துரையாடியதுடன், இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தான் உரையாற்றி தீர்வைப் பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago