Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
நானாட்டான் பிரதேச சபையின் தலைவர், உப தலைவர் தெரிவின் போது, திருவுலச்சீட்டின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியமையானது, இறைவன் கொடுத்த வரம் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் மண்டபத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இச்சம்பவம், இன்று (25) இடம்பெற்றது.
நானாட்டான் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான வரவேற்பு நிகழ்வு, இன்று (25) காலை நானாட்டான் பிரதேச சபையில் இடம்பெற்றது.
இதன்போது, தெரிவு செய்யப்பட்ட புதிய தலைவர், உப தலைவர் உறுப்பினர்கள் மற்றும் கௌரவ விருந்தினர்கள் ஊர்வலமாக நானாட்டான் கலாசர மண்டபம் நோக்கி அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் கலாசார மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது விருந்தினர் உரையின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உரை நிகழ்த்தினர்.
குறித்த உரையில், நானாட்டான் பிரதேச சபையின் தலைவர், உப தலைவர் தெரிவுகள் இடம்பெற்ற போது, குறித்த தெரிவின் வாக்களிப்புகள் சம நிலையை அடைந்தது.
எனினும், தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் திருவுலச்சீட்டின் மூலம் இடம்பெற்ற போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவர் தெரிவு செய்யப்பட்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருவர் திருவுலச்சீட்டின் மூலம் தலைவர் மற்றும் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டமை, இறைவன் கொடுத்த வரம் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, குறித்த உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மண்டபத்தில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் 8 பேர் வெளி நடப்பு செய்தனர்.
எனினும், குறித்த நிகழ்வுகள் எவ்வித தடங்களும் இன்றி நிறைவடைந்து.
குறித்த நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களுக்கு உரிய கௌரவம் வழங்கப்படவில்லை எனவும், பழையதை மறப்போம், மறப்போம் என கூறிக்கொண்டு பழைய விடையங்களை ஞாபகப்படுத்துகின்றமை தமக்கு வேதனையை ஏற்படுத்துவதாகவும், அதனை கண்டித்தே தாம் மண்டபத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததாகவும் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago