Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 26 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா புதுக்குளம் பகுதிக்கு அருகாமையில் முதிரைக்குற்றிகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
குறித்த சம்பவம் வெள்ளிக்கிழமை (26) காலை இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…
குறித்த வாகனம் இரணை இலுப்பகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த போது அங்கு கடமையில் இருந்த பொலிஸாரால் நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் அது நிறுத்தாமல் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் புது குளத்திற்கு அண்மித்த பகுதியில் விபத்துக்குள்ளான நிலையில் பொலிஸாரால் அவ் வாகனம் மீட்கப்பட்டது.
வாகனத்தில் இருந்த 11முதிரைக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
வாகனத்தின் சாரதி மாயமாகியுள்ள நிலையில் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .