2025 ஜூலை 02, புதன்கிழமை

மதுபோதையில் அட்டகாசம் செய்த ஆசிரியர்களை தண்டிக்க கோரி ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2015 நவம்பர் 09 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் மதுபோதையில் அட்டகாசம் செய்த ஆசிரியர்களை தண்டிக்ககோரி, பெற்றோர் திங்கட்கிழமை (09) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

கடந்த 5ஆம் திகதி இரவு, நெடுங்கேணி மகாவித்தியாலயத்தியாலயத்தின் விடுதியில் தங்கிருந்த 6 ஆசிரியர்கள்   மதுபோதையில் அதிபரின் அலுவலகத்தை உடைத்து  சேதப்படத்தியதுடன், பாடசாலை வளாகத்திலிருந்த மரங்களையும் வெட்டி வீழ்த்தியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த 6 ஆசிரியர்களும் நெடுங்கேணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றத்தில் ஆஜாப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையிலேயே குறித்த பாடசாலையின் மாணவர்களின் பெற்றோர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

பாடசாலைக்கு முன்பாக கூடிய ஆர்ப்பாட்டக்கரர்கள்,  கல்வியியலாளாகளா? காடையர்களா?, மதுபோதையில் இருந்த ஆசிரியர்களை தண்டிக்கவேண்டும், அரச சொத்தை வீணடித்தவர்களை பணியில் இருந்து நிறுத்து என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்ததுடன், வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று அங்கு பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .