2025 ஜூலை 02, புதன்கிழமை

மதுபோதையில் காரை செலுத்தியவர்களுக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

மதுபோதையில் காரை செலுத்திய அரியாலை பகுதியை சேர்ந்த இருவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிநி நந்தசேகரன் வியாழக்கிழமை (22) உத்தரவிட்டார்.

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்த காரை, ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் புதன்கிழமை (21) இரவு வழிமறித்து சோதனை செய்தபோது, காருக்குள் இருந்த இருவரும் மதுபோதையில் இருந்துள்ளதுடன் மும்மொழியிலும் பிரதேச செயலர் என பொறிக்கப்பட்ட பதாகையையும் வைத்திருந்துள்ளனர்.

இருவரையும் கைதுசெய்த பொலிஸார், சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .