Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 பெப்ரவரி 21 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரொசேரியன் லெம்பட்
மன்னார் - அடம்பன்,முள்ளிக்கண்டல் பகுதியில் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிலங்குளம் மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 33, 55 வயதான இருவரும் செவ்வாய்க்கிழமை (20) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2023 ஆண்டு ஒகஸ்ட் 24 ஆம் திகதி இந்த இரட்டை கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்தவர்கள் மீது அன்று துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராஜா (வயது-42) மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஈச்சளவக்கை கிராமத்தை சேர்ந்த கணபதி காளிமுத்து (வயது-56) ஆகியோரே உயிரிழந்தனர்.
இந்த இரட்டை படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .