2021 மே 18, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் இராணுவத்தினரால் வெடி பொருட்கள் மீட்பு

Editorial   / 2020 மார்ச் 03 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னாரில் இரண்டு இடங்களில் இருந்து இராணுவத்தினரால் வெடி பொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் சௌத்பார் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கிலோகிராம் வெடி மருந்து மற்றும் அதற்கு பயன்படுத்தும் 27  குச்சுகளும் நேற்று  (2) மாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினர் குறித்த பகுதியில் மேற்கொண்ட சோதனை நவடிக்கைகளின் போது குறித்த வெடி மருந்து மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மன்னார் பள்ளிமுனை கோந்தை பிட்டி கடற்கரையோர பகுதியில் இன்று (03) காலை சக்தி வாய்ந்த வெடி பொருள் ஒன்றை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள பற்றை ஒன்றில் இருந்து குறித்த வெடி பொருளை மீட்டுள்ளனர்.

எஸ்.றொசேரியன் லெம்பேட் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .