எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2018 மார்ச் 09 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}


முஸ்ஸீம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்களை கண்டித்து இன்று (9) மன்னாரில் உள்ள முஸ்ஸீம் மக்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பஸார் பகுதி மற்றும் ஏனைய இடங்களில் உள்ள முஸ்ஸீம் மக்களின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை ஏனைய தமிழர்களுடைய வர்த்தக நிலையங்களும் அதிக அளவில் மூடப்பட்டுள்ளன.
மேலும் மன்னாரில் உள்ள பள்ளிவாசல்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரச, தனியார் போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் இடம் பெற்று வருவதோடு, பாடசாலைகள் மற்றும் அரச தனியார் திணைக்களங்களின் செயற்பாடுகளும் வழமை போல் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago