2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

’மன்னாரில் டெங்கு அதிகரிப்பு’

Niroshini   / 2021 டிசெம்பர் 09 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்  

மன்னார் மாவட்டத்தில், கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிற சூழ்நிலையில், தற்போது டெங்கு காய்ச்சலும் அதிகரித்துக் காணப்படுவதாக, மன்னார் மாவட்டச் செயலாளர்  திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில், டெங்கு கட்டுப்பாடு தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் ஒன்று, நேற்று (8) காலை 10.30 மணியளவில், மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தற்போது சுகாதார திணைக்களம் வழங்கியுள்ள தகவல்களுக்கு அமைவாக, 25 தொடக்கம் 49 வயதிற்குற்பட்டவர்களே அதிகம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது என்றார்.

அவர்கள் தொழிலுக்குச் செல்லும் வயதுடையவர்களாக இருக்கின்றமையினாலும், டெங்கு காய்ச்சலானது, வயது குறைந்தவர்களை தாக்கக்கூடியது என்பதனாலும் மக்கள் மிகவும் விழிப்புடனும் அவதானத்துடனும் செயற்படுமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கு உரிய திணைக்களங்கள் வழங்குகின்ற ஆலோசனைகளுக்கு அமைவாக, கட்டுப்பட்டு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X