Niroshini / 2021 நவம்பர் 21 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்த மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், கடந்த 20 நாள்களில் 423 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.
மன்னார் மாவட்ட கொரோனா நிலைவரம் தொடர்பாக, அவர், இன்று (21) விடுத்துள்ள கொரோனா அறிக்கையிலேயே, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், மன்னார் மாவட்டத்தில், நேற்றைய தினம் (20), மேலும் புதிதாக, 18 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை, 423 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் குறுப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 2816 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் தற்போது வரை 25 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன எனவும், அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
7 minute ago
22 minute ago
28 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
28 minute ago
31 minute ago