எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் மனிதப் புதைகுழியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது வரை குறித்த மனித புதை குழியில் 256 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணி இன்று (05) 111 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று புதன்கிழமை (05) அகழ்வு பணிகள் இடம்பெற்றன.
இதன்போது தற்போது வரை 256 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் 250 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பல மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
16 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago