2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மன்னார் மாவட்டத்தில் கொரோனா ​உக்கிரம்

Editorial   / 2022 பெப்ரவரி 17 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் கடந்த 16 நாள்களில் 377 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

இவ்வாண்டு ஆரம்பம் முதல் தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 578 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மன்னார் மாவட்டத்தில் நேற்று (16) புதிதாக மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், பெப்ரவரி மாதம் தொடக்கம் முதல் தற்போது வரை 377 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

“இவ்வருடம் மொத்தமாக 578 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் இம்மாதம் 3 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 39 பேர் கொரோனா தொற்றால் மரணித்துள்ளனர்.

“ஓமிக்ரோன் பரவத் தொடங்கியதில் இருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை மன்னார் மாவட்டத்தில் 3 ஆகும். ஒவ்வொரு 120  நோயாளர்களுக்கும் ஒருவர் என்ற வகையில் இறப்பு இடம்பெற்றுள்ளது.

“எனவே, பொதுமக்கள் தமது 2ஆவது தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பின்னர் மூன்று மாதங்கள் நிறைவடைந்தது இருந்தால் கட்டாயமாக 3ஆவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும்.

“மேலும், பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொண்ட மக்களின் சதவீதம் மன்னார் மாவட்டத்தில் 39  சதவீதமாக காணப்படுகின்றது.

“இதுவரை மொத்தமாக 12,643 பாடசாலை மாணவர்களுக்கு முதலாவது தடுப்பூசி மன்னாரில் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான 2ஆவது தடுப்பு வழங்கும் நடவடிக்கைகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 16 தொடக்கம் 20 வயதுடைய மாணவர்களுக்கு குறித்த  2ஆவது தடுப்பூசி வழங்கப்படுகின்றது” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X