2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

மன்னார் மாவட்ட மேலதிக செயலாளருக்கும் தொற்று உறுதி

Niroshini   / 2021 நவம்பர் 11 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

மன்னார் மாவட்ட மேலதிக செயலாளர் மற்றும் ஒமந்தை கிராம அலுவலர் ஒருவர் ஆகியோருக்கு, கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட மேலதிக செயலாளர் மற்றும் அவரது குடும்பத்தினரது உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து,  இன்று (11), வவுனியாவில் துரித அன்டிஜன் பரிசோதனை முன்னெடுத்திருந்தனர். இதன்போது, மன்னார் மாவட்ட மேலதிக செயலாளருக்கும், அவரது குடும்பத்தினர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா, ஓமந்தை பகுதி கிராம அலுவலர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில், அவருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களையும் தனிமைப்படுத்துவதற்கு, சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X