2025 மே 23, வெள்ளிக்கிழமை

மன்றின் உத்தரவை மீறி காணிக்குள் வேலி நிர்மாணம்

Editorial   / 2019 மார்ச் 26 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ. கீதாஞ்சன்

 

நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி, ஒரு தரப்பினர், காணியில், மீண்டும் எல்லைப்படுத்தி வேலி அடைத்தச் சம்பவமொன்று, புதுக்குடியிருப்பு - 7ஆம் வட்டாரப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில், கடந்தாண்டு, மே 04ஆம் திகதியன்று, காணிப் பிணக்குக் காரணமாக ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அது தொடர்பில், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், வழக்காளிகளில் ஒரு தரப்பினர், நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி, குறித்த காணியில் எல்லை போட்டு, வேலியடைத்துள்ளனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X