2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மன்னார் பாலத்தடி கடற்கரையில் மனிதக்கழிவு

Gavitha   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதான பாலத்தடி கடற்கரைப்பகுதியில், அதிகளவான மனிதக்கழிவுகள் கலக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இன்று வெள்ளிக்கிழமை (4) காலை தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் நகர்ப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வடிகான், மன்னார் பிரதான பாலத்தடி கடற்கரைப்பகுதியை வந்தடைகின்றது. கழிவுநீர், கடற்கரையை சென்றடையும் வகையிலேயே இந்த கழிவுநீர் வடிகான் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மன்னார் பஸார் பகுதியில் உள்ள சில வர்த்தக நிலையங்கள், அதற்கு  சொந்தமான மலசலக்கூடத்தின் கழிவுகளை குறித்த கழிவுநீர் வடிகானில் கலக்க விடப்பட்டுள்ளமையினால், நேற்று (3) வியாழக்கிழமை மாலை பெய்த கடும் மழையின் காரணமாக, மனிதக்கழிவுகள் வாய்க்காலினூடக சென்று மன்னார் பிரதான பாலத்தடி கடற்கரைப்பகுதியில் கலப்பதாக, அந்த மீனவர்கள் தெரிவித்தனர்.

கடந்த வருடம், மன்னார் பஸார் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிலுள்ள  மலசலக்கூடத்தின் கழிவுகளை, கழிவுநீர் வாய்க்காலில் திறந்துவிடப்பட்டமை குறித்து  மன்னார் நகர சபையினால் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர், மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் உணவகத்துக்க எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அவ்வாறான நடவடிக்கைகள் குறைவடைந்திருந்தது. ஆனால், மீண்டும் மலசலக்கழிவுகள், கழிவுநீர் வாய்க்காலில் திறந்துவிடப்படுகின்றது. இதனால் மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக மீனவர்களின் படகுகள், வலைத்தொகுதிகளையும் சூழ்ந்து மனிதக்கழிவுகள் காணப்படுகின்றன.

எனவே, மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மீனவர்கள் கோரி நிற்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .