2025 மே 09, வெள்ளிக்கிழமை

’மரக்கறி வியாபாரி 4 மணிவரை இருப்பார்’

Niroshini   / 2021 ஜூலை 08 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி  - பூநகரி, முக்கொம்பன் பொதுச் சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடுபவரை, மாலை 4 மணிவரை மரக்கறிகளை விற்குமாறும் பணித்துள்ளதாக, பூநகரி பிரதேச சபை தவிசாளர் அ.ஐயம்பிள்ளை தெரிவித்தார்.

முக்கொம்பன் சந்தை திறக்கப்படும் போது, அருகில் உள்ள கடைகளில் மரக்கறி விற்க கூடாது என்று பிரதேச சபையால் அறிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், சந்தைக்கு அருகில் உள்ள கடைகளில் மரக்கறிகள் விற்கப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பில் அவரிடம் வினவியபோதே, இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், முக்கொம்பன் பொதுச் சந்தையில் ஒரு வியாபாரியே மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார் என்றும் இவர் பிற்பகல் 2 மணியுடன் மரக்கறி வியாபாரத்தை நிறைவு செய்வதனால், மாலையில் மரக்கறி வாங்க வருவோர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்றும் கூறினார்.

இதன் காரணமாக, வெளியில் உள்ள கடைகளிலும் மரக்கறி விற்கின்ற நிலைமை உள்ளதாகத் தெரிவித்த அவர், வெளியில் உள்ள கடைகளில் மரக்கறி விற்க வேண்டாம் என தான் நேரில் சென்று அறிவித்துள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடுபவரை, மாலை 4 மணிவரை மரக்கறிகளை விற்குமாறும் பணித்துள்ளதாக, தவிசாளர் அ.ஐயம்பிள்ளை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X