Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, குறித்த நபரிடம் இருந்து ஒரு தொகை பணமும் மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.ஆர்.சரத் தெரிவித்தார்.
மன்னார் அரச பஸ் தரிப்பிடத்துக்குப் பின் பகுதியில் அமைந்துள்ள மரக்காலையொன்றில் கடந்த புதன்கிழமை (07) இரவு உட்புகுந்த குறித்த நபர், அங்கிருந்த 5 இலட்சம் ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, மரக்காலையின் உரிமையாளர், நேற்று வியாழக்கிழமை (08) காலை தனது வர்த்தக நிலையத்தில் இடம்பெற்ற இந்தத் திருட்டுக் குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
முறைப்பாட்டையடுத்து, மன்னார் பொலிஸார் மேற்கொண்ட துரித விசாரணைகளின் போது திருட்டுச்சம்பவம் இடம்பெற்று 24 மணித்தியாலத்துக்குள் நேற்று (08) இரவே, வவுனியா வைரவர் புளியங்குளம் பகுதியில் வைத்து சந்தேகநபர் கைதுசெய்துள்ளனர்.
மன்னார் பொலிஸ் நிலையத்தின் தற்காலிகத் தலைமையக பொறுப்பதிகாரி பிரசன்ன பரனமன்னவின் ஆலோசனைக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.ஆர்.சரத் தலைமையில், உப பொலிஸ் பரிசோதகர் கே.வினோத், பொலிஸ் கொஸ்தபில்களான திஸாநாயக்க, சிவராஜ் மற்றும் சரவணண் ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினரே இக்கைதினை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேகநபரிமிருந்து, மிஞ்சிய 4 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் மன்னார் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.ஆர்.சரத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago