2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

மரணமான பெண்கள் இருவருக்கும் கொரோனா

Freelancer   / 2021 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியாவில் உயிரிழந்த இரு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்த பெண் ஒருவர் அயலவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 

அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

சம்பவத்தில் 28 வயதுடைய யசிந்தா  என்ற குடும்பப் பெண்ணே மரணமடைந்துள்ளார்.

இதேவேளை, வவுனியா குருமன்காடு பகுதியில் திடீரென மயங்கி விழுந்த வயதான பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் 

அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 

மரணமடைந்த இருவருக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X