Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஏப்ரல் 05 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் மாமனாருக்கும் மருமகனுக்கும் நேற்று (04) இடம்பெற்ற வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் மருமகன் உயிரிழந்துள்ளார்.
பிரிந்திருந்த தனது மனைவியை பார்க்க சென்ற குறித்த நபரை, மனைவியின் தந்தை வழிமறித்துள்ளார்.
இதன்போது இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாமனார் மண்வெட்டி பிடியினால் தாக்கியுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 34 வயதான ஆறுமுகம்பிள்ளை துஸ்யந்தன் 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .