2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மல்லாவியில் கவனயீர்ப்பு பேரணி

Editorial   / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

06.செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு- துணுக்காய் பிரதேசத்துக்குட்பட்ட, மல்லாவி பகுதியில் ஜனாதிபதியின் கிராம சக்தி மக்கள் செயற்திட்டத்தின் கீழ், போதைப்பொருளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மல்லாவி -துணுக்காய் பிரதான வீதியில் இன்று காலை (21) குறித்த பேரணி முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டோர், போதைப்பொருள் பாவனைக்கு எதிரான வசாகங்கள் தாங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு, கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.

மல்லாவி வடக்கு மங்கை குடியிருப்பு கிராம அலுவலகம் வரை சென்றடைந்த இந்த பேரணியில், மல்லாவி கிராம அலுவலகர்  ரா ஜினி, துணுக்காய் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்  ந.தாரகை,மல்லாவி பிராந்திய சுகாதார பணிமனை அதிகாரி  அரவிந்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .