2025 மே 05, திங்கட்கிழமை

மல்லாவியில் பரிசோதனை

Niroshini   / 2021 மே 17 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

மல்லாவியில், பொலிஸாரால், அடையாள அட்டை பரிசோதனை நடவடிக்கை, தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மல்லாவி நகருக்குள் நுழையும் பொது மக்கள் அனைவரிடமும், மல்லாவி பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் அடையாள அட்டை பரிசோதிக்கப்படுகிறது.

புதிய நடைமுறையின்படி, இன்றைய தினத்தில் பயணிக்க கூடியவர்கள் மட்டும் பொலிஸாரால் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஏனையோர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்படுகின்றார்கள்.

தொழில் நிலையங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் கடமை புரிவோர், அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தவிர்ந்த ஏனையோர் அனைவரும் அடையாள அட்டை பரிசோதனையின் பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X