2021 ஜூன் 14, திங்கட்கிழமை

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் முறுகல்

Niroshini   / 2021 மே 17 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும் சுகாதார நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ளலாம் என்று நீதிமன்றம் வழங்கிய கட்டளையின் பின்னர், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்கு, சட்டத்தரணி தனஞ்சயன் மற்றும் முன்னாள் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன்; ஆண்டிஐயா  புவனேஸ்வரன்  உள்ளிட்ட சிலர் சென்றிருந்தனர்

இதன்போது, குறித்த பகுதியில், பொலிஸார் குவிக்கப்பட்டு  இருந்த நிலையில், இவ்விடத்துக்குள் செல்ல முடியாது எனத் தெரிவித்த பொலிஸார், அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, குறித்த தரப்பினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .