Editorial / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், கொக்குத்தொடுவாய், வடக்கு கருநாட்டுக்கேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.
மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால், அக்கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று நண்பகல் வரை, 28 குடும்பங்களைச் சேர்ந்த 96 பேர் இடம்பெயர்ந்து, கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.
இப்பகுதிகளில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை மேலும் அதிகரிக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, குறித்த நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
27 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026