Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜனவரி 03 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
மாகாணசபை தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும். அதில் எந்தவித மாற்றமும் இல்லையென்று, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புகுழுவின் தலைவருமான கு. திலீபன் தெரிவித்தார்.
வவுனியா - கருப்பனிச்சான்குளத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், மாகாணசபை தேர்தல் விரைவில் நடைபெற வேண்டும் என்பது தான் எங்களது கட்சியின் நிலைப்பாடாகுமென்றார்.
அந்த மாகாண சபை தேர்தலிலே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பலப்படுத்தம் பட்ட்சத்தில்தான் வடமாகாணம் வளமான மாகாணமாக வரும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை எனவும், அவர் தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சியினர் ஏற்கெனவே இருந்த மாகாணசபையை கூட்டுமாறு தெரிவிப்பது அது அவர்களுடைய கருத்தே தவிர அது முடிவல்ல எனத் தெரிவித்த அவர், பெரும்பான்மை உள்ள இந்த அரசில் முக்கிய பதவியில் இருக்கும் எமது அமைச்சர் கூட மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என விரும்புகிறார எனவும் கூறினார்.
'அவருக்கு நல்லதொரு சமிஞ்கை கிடைத்தபடியால்தான் எல்லா கூட்டங்களிலும் மாகாணசபை நடத்தப்படும், நடத்தப்பட்ட வேண்டும் என கூறிவருகின்றார். ஆகவே, நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம் மாகாணசபை தேர்தல் நடத்தப்படும்' என, அவர் தெரிவித்தார்.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025