Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஜனவரி 19 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் நீதிமன்றத்திற்கு முன்பாக செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளருக்கு மாங்குளம் பொலிஸ் நிலையத்தின் மாங்குளம் நீதிமன்றத்தின் காவல் கடமையில் இருந்த பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதோடு அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்கள் இன்று காலை முல்லைத்தீவு மாங்குளம் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக நீதிமன்ற பெயர்ப் பலகை மற்றும் நீதிமன்றத்திற்கு வெளியில் செய்திக்காக புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்துகொண்டு அந்த இடத்தில் இருந்து வெளியேறிய போது அங்கே கடமையிலிருந்த மாங்குளம் பொலிஸார் ஊடகவியலாளரை மறித்துள்ளனர். அப்போது ஏன் வீடியோ எடுத்ததாகவும் யார் எனவும் கோரியபோது ஊடகவியலாளர் அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையை காண்பித்து ஊடகவியலாளர் என உறுதிப்படுத்திய போதும் ஊடகவியலாளர்களுக்கு நீதிமன்றத்துக்கு வெளியில் வீடியோ, புகைப்படம் எடுக்க முடியாது என பொலிஸார் தர்க்கத்தில் ஈடுபட்டனர்
இதன்போது நீதிமன்றத்துக்குகு வெளியில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு எந்த தடையுமில்லை என்று ஊடகவியலாளர்கள் பொலிஸாருக்கு எடுத்துக் கூறியபோது அதனை ஏற்றுக்கொள்ளாத பொலிஸார் ஊடகவியலாளர் உடைய அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு நீதிமன்றத்திற்குள் சென்று அவருடைய உயர் அதிகாரிகளை கேட்க வேண்டும் என்று சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல் ஊடகவியலாளரின் அடையாள அட்டையை வழங்காது ஊடகக் கடமைக்கு இடையூறு விளைவித்தனர்
இவ்வாறு பத்து நிமிடங்களின் பின்னர் மீண்டும் ஊடகவியலாளரின் அடையாள அட்டையைக் கொண்டு வந்து வழங்கிய பொலிஸார், குறித்த ஊடகவியலாளரை தங்களுடைய கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago