2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

மாணவர்களுக்கு போதைவஸ்து விற்பனை செய்தவர் கைதானார்

Editorial   / 2017 ஜூலை 11 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.என்.நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார் 

கிளிநொச்சி நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் சிலருக்கு, மாவா என்ற போதைவஸ்தை விற்பனை செய்த குற்றத்தில், கிளிநொச்சி முல்லைத்தீவுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்னவின் விசேட குழுவினரால், இரணைமடுப் பகுதியில் வைத்து, நேற்று இரவு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  

குறித்த நபர், பாடசாலை மாணவர்களுக்கு, குறித்த போதைவஸ்தை விநியோகிக்கின்றார்  என கிராம மக்களால், வெலிக்கன்னவுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக, அப்பகுதி சிறுவன் ஒருவனுடன் சிவில் உடையில் சென்ற பொலிஸார் ஒருவர், போதைப்பொருள்  விற்பவரிடம் பணம் கொடுத்து போதைப்பொருளைக் பெற்றுக்கொண்டு, பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த சம்பவத்தினை உறுதி செய்துகொண்ட பின்னரே சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .