Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 ஜனவரி 19 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கில் பெருமளவான காணிகள் கிராம அலுவலர்கள் உள்ளிட்ட சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வெளிப்படுத்தல் உறுதி போன்ற போலி ஆவணங்களையும் அவர்கள் தயாரித்து வைத்திருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வடகாடு கிராமத்தில் சுமார் 80 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள், கிராம அலுவலர் ஒருவரால் துப்புரவு செய்யப்பட்டு, போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, வடகாடு கிராமத்தில் வாழும் தங்களுக்கு வயல் காணிகளை வழங்குவதாகத் தெரிவித்து, காணிகள் துப்புரவு செய்யப்பட்டபோதும் கிராம அலுவலர் ஒருவரால் அக்காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, தொடர்ச்சியாக பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டினர்.
அதேபோன்று, சிறாட்டி குளம் மற்றும் நட்டங்கண்டல் ஆகிய பகுதிகளிலும் பொதுமக்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்து, கிராம அலுவலர்களால் காணிகள் துப்புரவு செய்யப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டு, பயிர்செய்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டினர்.
நீண்ட காலமாக குறித்த பிரதேசங்களில் வசித்து வரும் தங்களுக்கு வாழ்வாதார பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதற்கு கூட ஒரு துண்டு காணிகள் இல்லாத நிலையில், இவ்வாறு கிராம அலுவலர்கள் மற்றும் குறிப்பிட்ட சில அரச உத்தியோகத்தர்கள் காணிகளை ஆக்கிரமித்து வைத்திருப்பற்கு சில உயர் அதிகாரிகள் துணை நிற்கின்றனர் என்று என்று பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கிராம அலுவலர்கள் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலே இருக்கும் இவ்வாறான காணிகளை பெற்று, தங்களுக்குள் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காணியற்ற மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது தொடர்யில் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு வினவிய போது, இது போன்ற பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago