2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

’மாந்தை கிழக்கில் குடிநீர் நெருக்கடி ஏற்படவில்லை’

Niroshini   / 2021 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கில், குடிநீர் தேவைப்படுபவர்களுக்கு, குடிநீர் விநியோகித்து வருவதாக, மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் எம்.தயானந்தன் தெரிவித்தார்.

இது தொர்பில் தொடர்ந்துரைத்த அவர். தற்போது மழை பெய்திருப்பதன் காரணமாக, கிணறுகளில் நீர் காணப்படுகின்றதென்றார்.

கடந்த காலங்களில் இம்மாதங்களில் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வது வழமை எனத் தெரிவித்த அவர். மழை பெய்ததன் காரணமாக கிணறுகளில் நீர் காணப்படுவதன் காரணமாக குடிநீர் நெருக்கடி இம்மாதம் குறைந்து காணப்படுகின்றது என்றும் கூறினார்.

இருப்பினும் குடிநீர் நெருக்கடி, குடிநீர் வேண்டும் என்று அறிவிப்பவர்களுக்கு குடிநீரை உடனடியாக வழங்கி வருகின்றோம் என்றும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X