2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மாயமான மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு

Niroshini   / 2021 டிசெம்பர் 13 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எஸ்.றொசேரியன் லெம்பேட்   

மன்னார் - கோந்தைப்பிட்டி கடற்பரப்பில், நேற்று (12) காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களில், இன்றைய தினம்  காலை ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 யாழ்ப்பாணம் - பருத்தித்துறையை சேர்ந்த தர்ஷன் (வயது-19)  என்பவரே, சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

மேலும், அதே இடத்தைச் சேர்ந்த செந்தூரன்-(வயது-28) என்ற இரண்டு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தரும் காணாமல் போயுள்ள நிலையில், அவரை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றைய தினம்  (12) மதியம், மூன்று மீனவர்கள் கோந்தைப்பிட்டி கடலில், தமது படகை செலுத்தி தொழிலுக்குச் செல்ல சரி பார்த்துள்ளனர். இதன் போது மூன்று மீனவர்கள் உள்ளடங்களாக 8 பேர் படகில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X