Editorial / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - பள்ளிமுனை கடற்கரையில் அமைந்துள்ள மீனவர்களின் மீன்வாடிகள் சிலவற்றில் இருந்து, தடை செய்யப்பட்ட 'டைனமெற்' வெடி பொருட்களை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை, மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் இன்று (26) மாலைகைப்பற்றியுள்ளனர்.
மன்னார் பள்ளிமுன கடற்கரையில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இன்று (26) மதியம் ஒரு தொகை மீன்களுடன் கரைக்குத் திரும்பியுள்ளனர்.
இதையடுத்து, கடற்படையினர் வழங்கிய தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் 'டைனமெற்' வெடி பொருட்களை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை கைப்பற்றியுள்ளனர்.
இதன் போது அங்குள்ள 4 வாடிகளில் காணப்பட்ட மீன்கள், தடை செய்யப்பட்ட 'டைனமெற்' வெடி பொருட்களை பயன்படுத்தி பிடித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஒரு தொகை மீன்களையும் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக, கடற்தொழில் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
4 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
22 Dec 2025