Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேசாலை 4ஆம் வட்டார கடற்கரை பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் வாடி ஒன்றினுள், மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் நேற்று (11) அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பேசாலை 4ஆம் வட்டாரம் கடற்கரை பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் வாடி ஒன்றினுள் இனம் தெரியாத பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினை தொடர்ந்து பொலிஸார் குறித்த பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், குறித்த சம்பவம் தொடர்பாக, பொலிஸார் கடந்த 8ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றதற்கமைய, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று பிற்பகல் 1 மணியளவில், குறித்த பகுதியில், மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முதலில் குறித்த மீன் வாடி முழுமையாக அகற்றப்பட்ட நிலையில், மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில், பெக்கொ இயந்திரத்தின் உதவியுடன் அகழ்வு பணிகள் ஆராம்பமாகின.
எனினும், குறித்த அகழ்வின் போது ஒரு சில உலோகப்பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்ட போதும்,எவ்விதமான மர்மப்பொருட்களும் கண்டு பிடிக்கப்படாத நிலையில் அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
12 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago