2025 மே 09, வெள்ளிக்கிழமை

’மீன் வியாபாரம் செய்தால் வருமானம் கிடைக்கும்’

Niroshini   / 2021 ஜூலை 01 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள சந்தையில், மீன் உள்ளிட்ட கடலுணவுகளை வியாபாரம் செய்வதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்தினால், கரைதுறைப்பற்று பிரதேச சபையால் பாரியளவில் வருமானதை ஈட்டமுடியும் என, கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை தெரிவித்தார்.

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்றுப் பிரதேச சபையின் மாதந்த அமர்வு, நேற்று முன்தினம் (30) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், முல்லைத்தீவில் இருந்து கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கடலுணவுகள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் இதனால் கரைதுறைப்பற்றுப்பற்று பிரதேச சபைக்கு எந்த வருமானமும் கிடைப்பதில்லை எனவும் கூறினார்.

எனவே, இவ்வாறு முல்லைத்தீவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடலுணவுகளுக்கு, கரைதுறைப்பற்று பிரதேசசபை வரி அறவீடுகளைச் செய்யவேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.

அதற்காக முல்லைத்தீவு நகர சந்தையில், மீன் உட்பட கடலுணவுகளை வியாபாரம் செய்யக்கூடிய வகையிலான ஏற்பாடுகளை கரைதுறைப்பற்று பிரதேசசபை விரைவில் முன்னெடுக்க வேண்டுமென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X