Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
முகமாலை பகுதியில் ஆபத்தான வெடிபொருட்கள் தற்போதும் காணப்படுவதாக அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி முகமாலை பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மக்கள் மீள்குடியேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தமது காணிகளை துப்பரவு செய்யும் போது, ஆபத்தான வெடிபொருட்களை தாம் காணுவதாகவும், அது தொடர்பில் உரிய தரப்பினர்களுக்கு தாம் அறிவித்து அவற்றை அகற்றி வருவதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை, அப்பகுதிகளில் ஆபத்தான வெடிபொருட்கள் தொடர்பில் பொது அமைப்புக்கள் மற்றும் அரச தரப்புக்களால் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப்பகுதி கடந்த 2006 ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது முன்னரங்க நிலைகளாக காணப்பட்டு இரு தரப்பினர்களுக்கும் இடையில் கடுமையான மோதல் இடம்பெற்ற பகுதியாகும்.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அப்பகுதிகளில் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் பெருமளவான வெடிபொருட்கள் அகற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
33 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
2 hours ago