2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

முக்கொம்பனுக்கு 2ஆவது பஸ் சேவை ஆரம்பம்

Niroshini   / 2021 நவம்பர் 14 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - முக்கொம்பன் மகா வித்தியாலய ஆசிரியர்களின் போக்குவரத்து நலன் கருதி,   இலங்கைப் போக்குவரத்து சபையின்  இரண்டாவது பஸ் சேவை, நாளை (15) தொடங்கப்பட உள்ளது. 

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில், வடபிராந்திய இலங்கைப் போக்குவரத்து சபையின் பிரதம பிராந்திய முகாமையாளரின்  உத்தரவில், கிளிநொச்சி கிளையின் இலங்கைப் போக்குவரத்து சபையால், இந்தப் பஸ் சேவை முன்னெடுக்கப்பட உள்ளது. 

யாழ்ப்பாணம் - பொன்னாலையில் இருந்து அதிகாலை 4.50 மணியளவில் ஆரம்பமாகும் இந்தப் பஸ் சேவை,  மூளாய், சங்கானை, மருதனார்மடம், சுன்னாகத்தை சென்றடைந்து, மீளவும் மருதனார்மடம், உரும்பிராய், கோப்பாய், கைதடி, சாவகச்சேரி, கொடிகாமம், பளை, பரந்தன், பூநகரி - 10ஆம் கட்டை வழியாக முக்கொம்பன் கிராமத்தைச் சென்றடையும்.  

மீளவும் முக்கொம்பனில் இருந்து, பிற்பகல் 1.35 மணிக்கு பயணிக்கும் இந்தப் பஸ், அதே வழித்தடத்தில் பொன்னாலையை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X