2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

முசலி பிரதேச செயலாளரை இடமாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

முசலி பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை (16) காலை மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து அவரை உடனடியாக  இடமாற்றம் செய்யக் கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மன்னார் மாவட்ட செயலர் சி.ஏ.மோகன்ராஸிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.

மகஜரை பெற்றுக் கொண்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில்,

ஏற்கனவே குறித்த பிரதேச செயலாளர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் விசாரணை இடம்பெறும். அதேவேளை குறித்த மகஜர் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .