2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

முதிரை, பாலை மரங்கள் மீட்பு

Yuganthini   / 2017 ஜூலை 09 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனிக்குளம் காட்டுப் பகுதியில், நேற்று (08) அதிகாலை சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட முதிரை, பாலை மரங்களைக்கொண்டு செய்யப்பட்ட  பலகை, தீராந்திகளை, மல்லாவி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, சிராட்டி குளம் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த வாகனத்தை நிறுத்த முற்பட்ட பொலிஸார் அவ்வாகனம் நிறுத்தாமல் பயணித்துள்ளது.

இதையடுத்து, வவுனிக்குளம் காட்டுப் பகுதியில், வாகனத்தை கைவிட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸார், கடத்தப்பட்ட மரங்களுடன் வாகனத்தையும் மீட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .