2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

முதிரை மரக் குற்றிகள் மீட்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் தேராவில் வனப் பிரதேசத்துக்குரிய வேணாவில் காட்டுப்பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் ஒன்றையும் பெறுமதிவாய்ந்த முதிரை மரக் குற்றிகளையும் மீட்டுள்ளதுடன்,  சந்தேக நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் ஒட்டுசுட்டான் வனப்பகுதிக்குட்பட்ட வேணாவில் காட்டுப் பகுதியில், நேற்றிரவு (01) சட்டவிரேதமான முறையில் முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற பட்டா ரக வாகனம் ஒன்றையும் பெறுமதிவாய்ந்த முதிரைமரக் குற்றிகளையும் மீட்டுள்ளதுடன், சந்தேகநபரான வாகனத்தின் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தவுள்ளதாக,  வனவள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .