2025 மே 06, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவில் ஒரு கிலோ கிராம் நெல் 92 ரூபாய்க்கு கொள்வனவு

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 03 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ. கீதாஞ்சன்

விவசாய அமைச்சின் நெல் சந்தைப்படுத்தல் சபையானது முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளிடம் இருந்து காய்ந்த நெல்லை தரமான விலைக்கு கொள்வனவு செய்யவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உதவி பிராந்திய முகாமையாளர் அறிவித்துள்ளார்.

நேற்று தொடக்கம் மாவட்டத்தில் உள்ள நெல் களஞ்சியங்களில் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

அந்தவகையில் சிவப்பு நாடு, வெள்ளைநாடு 90 ரூபாயாகவும், ஏற்றுக்கூலி இரண்டு ரூபாயாகவும் மொத்தம் 92 ரூபாயாகவும் கொள்வனவு செய்யப்படவுள்ளதுடன், சம்பா நெல்லு 92 ரூபாயாகவும், ஏற்றுக்கூலி 2 ரூபாயாகவும், 94 ரூபாயாகவும் கொள்வனவு செய்யப்படவுள்ளது. கீரிச்சம்பா 95 ரூபாயாகவும், ஏற்றுக்கூலி இரண்டு ரூபாயாகவும், 97 ரூபாயாகவும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல் பை ஒன்று 40 ரூபாவாகவும், காய்ந்த நெல்லின் ஈரத்தன்மை 14 சதவீதத்துக்கு குறைவாகவும், சம்பி 9 வீதத்துக்கு குறைவானதாகவும் இருக்கவேண்டும் என்பதுடன் முள்ளியவளை, தண்ணீரூற்று, குமுழுமுனை, முறிப்பு பகுதிகளில் உள்ள நெல் சந்தைப்படுத்தல் களஞ்சியங்களில் விவசாயிகள் நெல்லை உரிய முறையில் கொடுக்கலாம் என்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் உதவி பிராந்திய முகாமையாளர் அறிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X