Niroshini / 2021 ஜனவரி 11 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், நேற்று மாலை முதல் மீண்டும் அடைமழை பெய்து வருவதோடு, காற்றும் வீசி வருகிறது.
இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதோடு, காற்றும் வீசி வருகின்றது
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில், இன்று காலை 11 மணி வரையான தகவல்களின் அடிப்படையில், முத்துஐயன்கட்டு மற்றும் தண்ணிமுறிப்பு பகுதிகளில் 54 மில்லி மீற்றர் அதிகபட்ச மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தண்ணிமுறிப்பு குளத்தின் மூன்று வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.
இதேவேளை, வீசுகின்ற காற்று காரணமாக, கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதோடு, மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025