2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவில் தேர்தல் பணிக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், தேர்தல் பணிக்கான முன் ஏற்பாட்டு நடவடிக்கைகள், இன்று (12) முதல் தொடங்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கே.காந்தீபன் தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 78 ஆயிரத்தி 360 வாக்காளர்கள் காணப்படுகின்றார்கள். வாக்களிப்பு நிலையங்களாக 136 வாக்களிப்பு நிலையங்கள் காணப்படுகின்றனவெனத் தெரிவித்தார்.

வாக்கெண்ணும் நிலையமாக, முல்லைத்தீவு மகா வித்தியாலயம் காணப்படுவதாகவும் தேர்தல் விதிமுறைகள் தொடர்பில் ஆரம்பக் குழுக்களின் பணிகள் (12) இன்றில் இருந்து தொடங்கியுள்ளதாகவும், அவர் கூறினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X