Editorial / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து சட்டவிரோதமாக பௌத்த விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்த தேரர் அவர்கள் உயிரிழந்த நிலையில் அவருடைய இறுதிக் கிரியைகளை கோவில் வளாகத்தில் செய்ய வேண்டும் என கோரி, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து அவருடைய உடலத்தை நீராவியடி பிள்ளையார் கோவிலின் தீர்த்த கேணிக்கு அருகாமையில் தகனம் செய்தவர்களை தண்டிக்க கோரியும் குறித்த சம்பவத்தின் போது, சட்டத்தரணிகள், பொதுமக்கள் தாக்கப்பட்டமைக்கு நடவடிக்கை எடுக்க கோரியும் வடக்கு - கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதி எங்கும் பல்வேறு கவனயீர்ப்புப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், தொடர்ச்சியாக சிறுபான்மை இன மக்கள் பெரும்பான்மை இன மக்களால் அடக்குமுறைகளுக்கு உள்ளதாகவும் நீதித்துறையின் நீதியை கடைப்பிடிக்கத் தவறியவர்களையும் இந்த அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையை இந்த குற்றச் செயல்கள் அல்லது தவறுகளை இறப்பவர்களை தண்டிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தை பணிக்குமாறு கோரி, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை 10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு - கிழக்கு சிவில் சமூக அமைப்புகள், மக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அவர்களுக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, குறித்த மகஜர் கிளிநொச்சியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உடைய காரியாலயத்துக்கு போராட்டத்தை மேற்கொண்ட சிலர் எடுத்துச் சென்றனர்.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago