Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், யானைகள் செயற்கையாக அழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – முள்ளியவளைப் பிரதேசத்துக்குட்பட்ட மதவாளசிங்கன் குளப்பகுதியில், வாயில் வெங்காய வெடியில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்ட காட்டுயானையொன்று, விவசாய நிலத்துக்குள் திங்கட்கிழமை (09) புகுந்து தஞ்சமடைந்துள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட காட்டு யானை தொடர்பில், வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்தும், அவர்கள் குறித்த யானையை அகற்றவோ அல்லது யானைக்கு மருத்துவம் செய்யவோ இதுவரை முன்வரவில்லையெனவும், அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், அதிகளவான காடுகள் காண்படுவதால் தெற்கில் இருந்தான யானைகள், கடந்த 2 வருடங்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட காடுகளில் இறக்கிவிடப்பட்டதாகத் தெரிவித்த அப்பகுதி மக்கள், இவ்வாறான நிலையில் இந்த யானைகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் செயற்கையாக அழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர்.
3 minute ago
11 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
11 minute ago
14 minute ago