2025 மே 19, திங்கட்கிழமை

‘முல்லைத்தீவில் 5 வீடுகள் சேதம்’

Editorial   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, 5 வீடுகள் சேதமடைந்துள்ளதாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமார் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இரண்டு வீடுகளும் வள்ளிபுனம் பகுதியில் வீசிய கடும்காற்று காரணமாக மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒரு வீடும், விசுவமடு மேற்கு பகுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தால் ஒரு வீடும் ஒட்டுசுட்டான் - சாளம்பன் பகுதியில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் ஒரு வீடும் சேதமடைற்துள்ளதாக, லிங்கேஸ்வரகுமார் தெரிவித்தார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 15 சிறு குளங்களின் நீர்மட்டம் அதிகாரித்து, வான்பாய்கின்ற போதிலும், பெரும் குளங்களின் நீர் மட்ட அதிகாரிப்பு குறைவாகக் காணப்படுகின்றது.

அத்துடன், நந்திக்கடல் நீர் ஏரியின் நீர் அதிகரித்துள்ளதால், மீனவர்கள் மகிழ்ச்சியடைந்து, தொழில்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X